மின்னஞ்சல் மூலம் வலைதள முகவரியை ( யு.ஆர்.எல்.)அனுப்புவது எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றுதான். இதில் உள்ள அபாயம் என்னவென்றால், வலைத்தள முகவரி மிகவும் நீளமாக இருந்தால், முகவரி உடையக்கூடிய ( Break ) வாய்ப்பு அதிகம். உடைந்த முகவரியிலிருந்து, சரியானதைப் பெறுவதும் சற்று சிரமம். நீளமான யு.ஆர்.எல். முகவரியை சுருக்கி சிறியதாக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://tinyurl.com/
மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்குகள் வழியாக மால்வேர்கள், வைரஸ்கள் நுழைவதற்கு வாய்ப்பு அதிகம். சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.
மேலும் சில உபயோகமான வலைத்தளங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
Nandri nanba
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி! சின்ன மலை
நீக்குபயனுள்ள பதிவு ! நன்றி நண்பா !
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி! தனபாலன்
நீக்கு