Monday, April 23, 2012

உங்களது நேரத்தை சரியாக செலவிட வேண்டுமா?


தினசரி காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் வேளைகளில் ஒன்று அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை குறித்து வைத்துக் கொள்வது. இதற்கு To Do List என்று பெயர். வழக்கமாக துண்டு காகிதம், நாளிதழ்களின் ஓரம், கல்யாண பத்திரிக்கையின் ஓரம் என்று எழுதி வைத்துக் கொள்வோம். லோஞ்சம் ஒழுங்காக இருப்பவர்கள் ஒரு நோட்டு போட்டு குறித்து வைத்துக் கொள்வார்கள். அதுவே நீங்கள் பெரிய நிறுவனமொன்றின் அதிகாரியாக இருந்தால் உங்கள் உதவியாளர் ஒரு டைரி போட்டு மணிக்கு மணி உங்கள் அப்பாயின்ட்மென்ட் ஐ குறித்து வைத்திக் கொள்வார்.

எப்படியானாலும் எல்லோருக்கும் ஒரு அட்டவணை இருக்கின்றது. அதைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ குறித்து வைத்துக் கொள்ளவாவது விரும்புகிறோம். இப்போது ஆன்லைனில் இந்த 'To Do List 'ஐ உருவாக்கலாம். அதில் சிறப்பாக உள்ள இணையதளம். http ://voo2do .com

'Voo2Do' வில் இலவசமாக பதிவு செய்து கொண்டு, நாம் ஈடுபட்டுள்ள பிராஜெக்டுகளின் விவரங்கள், தேதிகள் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டால் போதும். ஒவ்வொரு வேலையையும் செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆயிற்று, இன்னும் எத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என்றெல்லாம் இந்த லிஸ்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதே போன்ற சேவையை வழங்கும் பிற வலைத்தளங்கள்:

http://www.tadalist.com/


http://rememberthemilk.com/


உங்களுக்கு வேறு சில வலைத்தளங்கள் தெரிந்திருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment