Monday, April 16, 2012

பிளே ஸ்கூல் தொடங்குவது லாபகரமானதா?



கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக அருமையான வாய்ப்பைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, எதில் முதலீடு செய்யலாம் என்று வேறெங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அருமையான வாய்ப்பு வேறெதுவும் இல்லை, கல்வித் துறைதான். கோடிகளில் முதலீடுகள் குவியும் ஒரு முக்கியத் துறையாக அது மாறியிருக்கிறது. கல்வித் துறையில் சூப்பரான பல வாய்ப்புகள் இருக்கின்றன. சில ஆச்சரியமான புள்ளிவிவரங்கள்...
  • இந்தியா முழுக்க இருக்கும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 9.5 லட்சம்.
  • தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2.4 லட்சம்.
  • அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 கோடி.
  • தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 கோடி.
  • சுமார் 14 கோடி குழந்தைகள் ஆரம்ப மற்றும் உயர்கல்வி கிடைக்காத நிலையில் இருக்கின்றனர்.
  • 30 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 14.40 லட்சம் கோடி) மதிப்பு கொண்ட இந்திய கல்வித்துறை அடுத்து பத்து ஆண்டுகளில் 70 பில்லியன் டாலர் கொண்ட துறையாக வளரப் போகிறது!
மேற்சொன்ன இந்த புள்ளிவிவரங்களை மேலோட்டமாகக் கவனித்தாலே போதும், இந்திய கல்வித் துறையின் மார்க்கெட் எவ்வளவு பெரிது என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் பிளே ஸ்கூலுக்கு நல்ல தேவை உள்ளது.  நாமாக தொடங்குவதை விட பெரிய பிராண்டுகளின் பிரன்சைசீ ஆக தொடங்கினால் தொழிலை கற்றுகொள்வது எளிது.

இன்னும் அதிக விவரங்களுக்கு  இந்த லிங்கில் உள்ள எலெக்ட்ரானிக் புத்தகத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

பிளே ஸ்கூல் தொடங்குவது எப்படி?


2 comments: