Saturday, April 14, 2012

யார் தவறு?



ரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் கட்டுப்பாடே  இல்லாமல் லீவு எடுக்கிறார்கள். வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். இது யார் தவறு? தொழிலாளர்கள் தவறா, மேனேஜர் தவறா?

கி.மு. 500 காலகட்டத்தில் சீனாவில் வாழ்ந்த சன் ஸூ (Sun Tzu), யுத்தம் தொடர்பான ராஜதந்திரங்களில் மாமேதை. இவர் எழுதிய யுத்தக் கலை (Art of War) புத்தகத்தில் மேற் சொன்ன பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார்.

180 பெண்களுக்கு போர்ப் பயிற்சிகள் கொடுத்தார் சன் ஸூ. 90 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரித்தார். பயிற்சிகள் முடிந்தவுடன், போட்டிகள் நடந்தன. இரண்டாம் அணியைச் சேர்ந்த பெரும்பாலானோர் செமையாகச் சொதப்பினார்கள்.

திறமையுடன் விளையாடிய முதல் அணியின் வீரர்கள் பாராட்டப்பட்டனர். இரண்டாம் அணி வீரர்களுக்குத் தண்டனை அளிக்கத் தயாரானார் அரசர். உடனே தடுத்தார் சன் ஸூ.

'மன்னரே, இரண்டாம் அணியில் எல்லோருமே தவறு செய்தார்கள். ஆக, அது அவர்கள் தவறல்ல, தலைமையின் தவறுதான். எனவே, தலைமைக்குத்தான் தண்டனை தரவேண்டும்!'' என்றார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, யார் தவறு என்று?


The Art of War by Sun Tzu

No comments:

Post a Comment