வெள்ளி, 20 டிசம்பர், 2024



 ஏன் ஏற்றுமதி ஒரு சிறந்த தொழிலாக கருதப்படுகிறது?

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவி:
ஏற்றுமதியாளர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாடு இறக்குமதியை விட ஏற்றுமதியை அதிகமாக செய்யும் போது, அது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அரசு ஆதரவு:
இந்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளது.

லாபத்திற்கான வாய்ப்பு:
உள்நாட்டு சந்தையை ஒப்பிடுகையில், ஏற்றுமதி தொழிலில் லாப சாத்தியம் அதிகமாக உள்ளது.



சேவை ஏற்றுமதி ( Services Export )என்றால் என்ன?

ஒரு நாட்டைச் சேர்ந்த நபர் அல்லது நிறுவனம், வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கோ அல்லது நபர்களுக்கோ வழங்கும் எந்தவொரு சேவையும் சேவை ஏற்றுமதி என அழைக்கப்படுகிறது.
உதாரணங்கள்:

இந்திய நடிகர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பது. இதனால், நடிகரின் திறமை மற்றும் சேவை வெளிநாட்டு சந்தைகளில் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணம் 1 : ரஜினி /கமல் உள்ளிட்ட நடிகர்கள் சர்வதேச அளவில் பணிபுரிந்தது.
இந்திய மென்பொருள் பொறியாளர்கள் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றுவது.
இது இந்தியா தனது மனிதவள சேவைகளை உலக அளவில் வழங்கி வருவதற்கான உதாரணமாகும்.
உதாரணம் 2 : தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இந்திய யோகாஆசிரியர்கள் வெளிநாட்டு பள்ளிகளில் பணிபுரிவது.
யோகா இந்தியாவின் பாரம்பரிய சிகிச்சை மற்றும் உடல் ஆரோக்கிய கலை. பல வெளிநாட்டு பள்ளிகளில் இந்திய ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.
உதாரணம் 3 : தமிழ்நாட்டில் இருந்து பிரபலமான யோக ஆசிரியர்கள் யூரோப்பில் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.



உற்பத்தியாளர் ( Manufacturer) ஏக்ஸ்போர்டரின் நன்மைகள் மற்றும் என்ன?

நன்மைகள்:

  • பொருளுக்கு தகுந்த விலை கிடைக்கும்.
  • விற்பனையின் மொத்த லாபம் அதிகமாக இருக்கும்.
  • பொருளின் தரம் மற்றும் காலக்கெடு மீது முழுமையான கட்டுப்பாடு இருக்கும்.
குறைகள்: 
  • உற்பத்தி ஆலை அமைக்க அதிகமான பணமும் மனிதவளமும் தேவைப்படும்.



மர்சண்ட் (Merchant) ஏக்ஸ்போர்டரின் நன்மைகள் மற்றும் குறைகள் என்ன? நன்மைகள்:

  • தயாரிப்பு ஆலை அமைப்பதற்கான செலவுகள் ஏதும் இல்லை.
  • ஒரே தயாரிப்பின் மீது சார்ந்து இருக்க தேவையில்லை; சந்தை நிலைமையின் அடிப்படையில் தயாரிப்பு பொருட்களை மாற்றலாம்.
குறைகள்:
  • விற்பனையின் மொத்த லாபம் குறைவாக இருக்கும்.
  • தயாரிப்பின் தரமும், தயாரிக்கும் நேரமும் உற்பத்தியாளர் மீது சார்ந்து இருக்கும்.
  • தயாரிப்பு பொருள் உற்பத்தியாளரின் பிராண்டு பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டால், இறக்குமதியாளர் நேரடியாக உற்பத்தியாளர் மூலம் பொருட்களை வாங்க தொடங்கலாம்.