Sunday, April 29, 2012

பிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை.

பிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை. வங்கி கடன் தருமா?


நம்மில் பெரும்பாலோனருக்கு பிசினஸ் பண்ணும் ஆசை இருக்கும். ஆனால் ரிஸ்க் எடுக்க தைரியம் இல்லாத காரணத்தாலோ அல்லது முதலீடு செய்ய கையில் பணம் இல்லாத காரணத்தாலோ அந்த முயற்சி தொடங்கப்படாமலே போய்விடும். தன்னம்பிக்கையும், ரிஸ்க் எடுக்கும் தைரியமும் உள்ளவர்களே வாழ்க்கையிலும், பிசினசிலும் சாதிக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன், நம் நாட்டில் தொழில் தொடங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இப்பொழுது அரசாங்கமே தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிறது. நம்மிடம் நல்ல ஐடியா இருந்து முதலீடு மட்டும் இல்லையென்றால் உதவ முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. இது பற்றிய மற்றொரு பதிவு (http://thinkbig360.blogspot.in/2012/04/blog-post_17.html) வங்கிகளின் மூலமும் கடன் பெறலாம். வங்கிகள் கடன் தர நம்மிடம்  சில தகுதிகளை எதிபார்க்கும்.


 பொதுவாக வங்கிகள் தொழில் முனைவோரிடமிருந்து  இருந்து நான்கு விஷயங்களை எதிர்பார்க்கும். இவற்றை 4C என்று  கூறுவார்கள்.

மூலதனம்.( Capital )

 தொழில் முனைவோரிடம் இருக்கும் மூலதனத்தை வைத்துதான் அவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை வங்கி முடிவு செய்யும். குறைந்தது 10 முதல் 50 சதவிகிதம் வரை தொழில் முனைவோரிடம் மூலதனம் இருக்க வேண்டும்.


வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்கும் திறன்.( Capacity )

தொழில்முனைவோரிடம் இருக்கும் பிஸினஸ் பிளான். என்ன தொழில் செய்யப் போகின்றார் , எப்படி செய்யப்போகின்றார்  , போட்டியாளர்கள் இருக்கிறார்களா, என்ன மார்க்கெட் இருக்கிறது, என்ன லாபம் கிடைக்கும், அவருடைய முன் அனுபவம் என்ன என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

குணநலன்.( Character )

தொழில் முனைவோர் யார், என்ன படித்திருக்கின்றார் , நம்பி கடன் கொடுக்கலாமா, வேறு ஏதாவது ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கி அதைத் திரும்பக் கொடுக்காமல் போயிருக்கின்றாரா?, வழக்குகள் இருக்கிறதா?, அவரை  யார் அறிமுகம் செய்கிறார்கள் போன்ற  விஷயங்களையும் கவனிப்பார்கள்.

அடமானம்.( Collateral Security )

வாங்கும் கடனுக்கு ஈடாக அடமானம் கொடுக்கும் வகையில் தொழில் முனைவோரிடம் ஏதேனும் சொத்து இருக்கவேண்டும்.

மேற்சொன்ன நான்கு விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்து, வங்கிகள் கேட்கும் மற்ற சில சான்றுகளையும் ( வருமானவரிச் சான்று )கொடுத்து விட்டால் , கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

2 comments: