Monday, April 30, 2012

உபயோகமான வலைத்தளங்கள்-3 : இரத்ததானம்

இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம்

நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், விபத்தில் சிக்கிக் கொண்டு உடனடி சிகிச்சை கொள்ள துடிப்பவர்கள் அனைவருக்கும்  இரத்தம் ஓர் உடனடித் தேவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் உதவ தன்னார்வத் தொண்டர்கள் பலர் ( நானும் இந்த தளத்தில் உறுப்பினர் தான்) உள்ளனர். ஆனால் அவசர காலத்தில் உடனடியாக அவர்களை தொடர்பு   கொள்ள  முடிவதில்லை.  இவர்களின் கைபேசி எண்களை  சேகரித்து  வைத்துள்ள  சேவை மையங்களின் மூலம்  தொடர்பு கொள்வதற்குள் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கவே http://www.friends2support.org/   என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் சென்றால் இங்கு இரத்த வகை வாரியாக, தன்னார்வலர்களின் முகவரி கிடைக்கிறது. எந்த இடத்திற்கு இவர்கள் வர வேண்டும் எனக் குறிப்பிட்டால், உடனே அந்த இடத்திற்கு அருகே உள்ளவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நாம் நேரடியாகவே இரத்தக் கொடையாளிகளுடன் பேசி அவர்களை வரவழைக்கலாம்.


அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்கள் இயங்கவில்லை என்றால், உடனே இந்த தளத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்,. அவர்கள் சார்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு சரியான தொலைபேசி எண்களைப் பெற்று, தளத்தில் அப்டேட் செய்கின்றனர்.   சேவை நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள மிகவும் உபயோகமான இணையதளம் இது.


No comments:

Post a Comment